திரு இருதய ஆண்டவர் பெருவிழா
இயேசு ஆண்டவருடைய திருஇருதய அன்பை நினைத்து கொண்டாடுகிற இன்றைய பெருவிழா நாளிலே இயேசுவின் இதயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதயம் அன்பின் அடையாளம். இதயம் இயங்கிக் கொண்டிருப்பது போல, மனிதர்களின் அன்பு செயல்பாடுகளும் தொடர்ந்து இயங்க வேண்டும் . எனவே, இயேசுவின் இதய அன்பை மட்டுமல்ல, அவரின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் உள் வாங்குவோம்; அவரின் செயல்பாடு மிக்க சிந்தனை நம்மில் செயலாற்றபடட்டும் .